தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு சிலவைகள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இதேபோன்று திரைப்படங்களில் இடம்பெறும் சில பாடல்களும் ரசிகர்களை அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் யூடியூபில் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். அதன்படி தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் 353 மில்லியன் பார்வையாளர் களையும், லிரிக் வீடியோ 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
அதன் பிறகு விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலின் லிரிக் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 47 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற டிப்பம் டிப்பம் பாடலின் லிரிக் வீடியோ 92 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 48 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இதேபோன்று இப்படத்தில் இடம் பெற்ற டூ டுட்டு டூ பாடலின் லிரிக் வீடியோ 61 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 87 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்திலிருந்து ஜாலியோ ஜிம் கானா பாடலின் லிரிக் வீடியோ 71 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 64 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் இடம் பெற்ற பிரைவேட் பார்ட்டி பாடலின் லிரிக் வீடியோ 82 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 62 மில்லியன் பார்வையாளர்களையும் பெற, ஜலபுல ஜங்கு பாடலின் லிரிக் வீடியோ 98 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 49 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
சிம்பு குரலில் தி வாரியார் படத்தில் இருந்து வெளியான புல்லட் சாங்கின் லிரிக் வீடியோ 123 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 45 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காத பாடலின் லிரிக் வீடியோ 55 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 85 மில்லியன் பார்வையாளர்களையும் பெற, தாய்க்கிழவி பாடலின் லிரிக் வீடியோ 31 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 73 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.