தமிழர் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, வெள்ளம், முந்திரி மற்றும் திராட்சை அடங்கிய தொகுப்பினை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதுச்சேரி அரசு வழங்க உள்ளது. இதற்காக 1.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய் சரவணா குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Categories
மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
