Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி” நாளை முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்து…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |