கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் அந்த. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனதோடு திரையுலக பிரபலங்கள் மற்றும் மத்திய மந்திரிகள் சிலரும் படத்தை பாராட்டி இருந்தனர். இதனால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஒரு பேட்டியில் காந்தாரா திரைப்படத்தின் தயரிப்பாளர் விஜய் கிரகந்தூர் அது குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, காந்தாரா படத்திற்கு நிச்சயமாக 2-ம் பாகம் எடுக்கப்படும்.
இந்த கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது முதல் பாகத்திற்கு முந்தைய கால கதையாக இருக்கலாம். ரிஷப் செட்டி தற்போது சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் வந்த பிறகு கதை குறித்து விவாதிக்கப்படும். ஆனால் தற்போதைக்கு காந்தாரா இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இல்லை. இன்னும் ஒரு சில படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். அந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு தான் காந்தாரா இரண்டாம் பாகம் இயக்கப்படும் என்று கூறினார். மேலும் காந்தாரா இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மிதந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.