தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொகுப்பாளினி டிடி-க்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கனெக்ட் படத்தில் தனக்கு தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் குறித்தும் பேசி உள்ளார். அவர் எனக்கு சத்யராஜை பார்க்கும்போதெல்லாம் அவர் என்னுடைய அப்பா தான் என்று எனக்குத் தோன்றும் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஏற்கனவே ராஜா ராணி என்ற திரைப்படத்தில் தந்தை-மகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.