தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐஎம்டிபி-யின் 2022-ம் ஆண்டுக்கான இந்திய அளவில் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படமானது சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், 2-ம் பாகத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Happy & overwhelmed to have #PonniyinSelvan1 🗡️ in the #IMDb Top 10 Most Popular Indian Movies of 2022! ✨
Thank you @IMDb @IMDb_in 😇#IMDbBestof2022 #PS1 🗡️ #Maniratnam @MadrasTalkies_ #Subaskaran @arrahman @gkmtamilkumaran @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/Y88wCsKew0
— Lyca Productions (@LycaProductions) December 20, 2022