சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் இந்திய வணிகப் போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இந்திய வணிகப் போட்டி ஆணையம் இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் இருக்கக்கூடிய இந்தியா சிமெண்ட் சில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் ரெய்டு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 8 அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும் கார்ட்டல் அமைத்து செயல்பட்ட புகாரில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து எந்த மாதிரியான வணிகப் போட்டிகளில் என்னென்ன செய்துள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருக்கக்கூடிய ஆவணங்களை எடுத்து, ஏற்கனவே இந்த அதிகாரிகள் கையில் வைத்துள்ள ஆவணங்களை வைத்து கேள்வி கேட்டு, அவருடைய ஆவணங்களையும் சரிபார்த்து எந்தெந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும், வணிகப் போட்டியில் எந்த மாதிரியான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என விரிவான ரெய்டு நடத்தி வருகின்றனர்..
போலீஸ் பாதுகாப்புடன் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த ரெய்டு இந்தியா சிமெண்ட்ஸ் மட்டுமல்லாமல் மற்ற சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.