நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது குறைந்த அளவாக, கேரளா மற்றும் சத்தீஷ்கரில் தலா ஒருவரும், பீகார், ஒடிசாவில் தலா 2 பேரும், சண்டிகார், தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் உத்தரகாண்டில் தலா 3 பேரும் இறந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.