உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அலுவா, பாலக்காடு,கோவை மற்றும் ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.