அறம் திரைப்படத்தை டைரக்டு செய்த கோபி நயினாரின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா “மனுசி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார். பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது “மனுசி” படத்தின் இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், படத்தில் நடிக்கக்கூடிய மற்ற நடிகர்கள் பற்றியும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. ஆகவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.