ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகையும், ஆந்திரா மாநில நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.