தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.
இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து நயன்தாரா பேசியுள்ளார். நயன்தாராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த புகைப்படத்தை பார்த்து நயன்தாராவிற்கு வயதாகி விட்டதாக பலரும் தெரிவித்தனர். இதற்கு நயன்தாரா தெரிவித்துள்ளதாவது, அந்த புகைப்படம் ஒரு சோகமான காட்சியின் போது எடுக்கப்பட்டது. சோகமான காட்சியில் சோகமாக தான் இருக்க முடியும். பின்ன என்ன கிளாமராவா இருக்க முடியும். விமர்சிப்பவர்கள் அனைத்தையும் தான் விமர்சிப்பார்கள். ஒல்லியாக மாறினால் விமர்சிப்பார்கள். குண்டாக மாறினால் விமர்சிப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அனைத்துமே பிரச்சனை தான் என தக்க பதிலடி தந்துள்ளார் நயன்.