சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாகின்ஷா காதர் என்பவர் வசித்து வந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் நண்பர்களான ஹேமா, வினோத் ஆகியோருடன் சாகின்ஷா சைதாப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் இருக்கும் பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஒடியதாக தெரிகிறது. இதனை பார்த்த கட்டுமான ஊழியர்கள் விரட்டி சென்று சாகின்ஷா மற்றும் வினோத் ஆகிய இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சிறிது நேரத்தில் வினோத்தும் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்த படுகாயமடைந்த சாகின்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்குபதிவு செய்த போலீசார் இன்ஜினியர்களான சக்திவேல், நம்பிராஜ், உமா மகேஸ்வரன், பாலசுப்பிரமணியன், ஜெயராம், அஜித், மனோஜ் ஊழியர் சிவபிரகாசம் ஆகிய 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.