தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து வருகிறார். தான் பயிற்சி பெறும் வீடியோ பதிவை ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், முதல் நாளில் இந்த சிலம்பத்தை கையில் பிடித்தது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த கலையின் உச்சத்தை அடைய முடியும். எனக்கு பொறுமையாக இந்த பயிற்சியை கற்றுத் தந்த பயிற்சியாளருக்கு மிகவும் நன்றி என பதிவிட்டுள்ளார்.