மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்த நிலையில் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிஷ்ணுபூர் – கௌபம் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளியில் இருந்து ஆய்வு சுற்றுலா மேற்கொண்ட போது விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் நோனியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் என்.பிரேன் சிங், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் எந்த பயணமும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் என் பிரேன் சிங், “இன்று பழைய கச்சார் சாலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க எஸ்டிஆர்எஃப், மருத்துவக் குழு மற்றும் எம்எல்ஏக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/INCManipur/status/1605564255637479427
Tragic: A bus carrying students of Thambalnu Higher Secondary School Yairipok for a study tour met with an accident at Khoupum road in Noney District, #Manipur.
15 students feared dead, several injured. pic.twitter.com/S0bH9YOqGt
— Pooja Mehta (@pooja_news) December 21, 2022
Deeply saddened to hear about the accident of a bus carrying school children at the Old Cachar Road today. SDRF, Medical team and MLAs have rushed to the site to coordinate the rescue operation.
Praying for the safety of everyone in the bus.@PMOIndia pic.twitter.com/whbIsNCSxO
— N.Biren Singh (@NBirenSingh) December 21, 2022
We convey our condolences to all the victims. We request schools and colleges to not do any movement in the early morning & late evening. Govt decided to give an ex-gratia of Rs 5 lakhs to the next of kin of victims: Manipur CM N Biren Singh pic.twitter.com/31M8EKI7ll
— ANI (@ANI) December 21, 2022