தற்போது உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது களைக்கட்டியிருக்கிறது. இதனை முன்னிட்டு டிச..24 முதல் அனைத்து தேவாலயங்களிலும் பிராந்தனைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள் மற்றும் வித விதமான உணவுகளை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிமாறும் இந்த நாள் எதற்காக டிச..25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து நாம் காண்போம். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை நினைவுகூரும் அடிப்படையில் வருடந்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
எனினும் இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்ததேதி தெரியவில்லை. இதற்கிடையில் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்ததேதி என்று முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. அதன்பின் உலக முழுவதும் டிசம்பர் 25-ம் தேதியன்று இந்த பண்டிகையை கொண்டாடலாம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடவுள் மகனாக கருதப்படும் இயேசு கிறிஸ்து பிறந்தநாளை குறிப்பது மட்டுமின்றி, அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எப்படி வாழ்க்கையில் முன்னேறி பயணித்தார் என்பது பற்றி நினைவுக்கூரும் நாளாகவும் டிசம்பர் 25ம் தேதி பார்க்கப்படுகிறது. அத்துடன் இவரின் தியாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் முக்கிய நாளாக இது பார்க்கப்படுகிறது. இப்பண்டிகை என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது கேக்குகள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.