இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமர்ப்பித்த அதிமுக வரவு செலவு கணக்கு ஏற்றது தேர்தல் ஆணையம்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர். அதனை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 2021 – 22 நிதியாண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வரவு செலவு கணக்குகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கும் பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு அதன் நகலும் தேர்தல் ஆணையத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.