Categories
தேசிய செய்திகள்

LIC அன்மோல் ஜீவன் திட்டம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

LIC அன்மோல் ஜீவன் திட்டம் உங்கள் நிதியை பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. இது தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான ஒரு நீண்டகால காப்பீட்டுத் திட்டம் ஆகும். நம் நாட்டின் பேரிடர் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் LICஅன்மோல் ஜீவன் திட்டமானது அகற்றப்பட்டது. இந்த ஜீவன் திட்டம் ஒரு வழக்கமான காப்பீட்டுகால திட்டம் ஆகும். இது பாலிசிதாரருக்கு எந்த வித வளர்ச்சிளையும் வழங்காது. இத்திட்டத்தில் 18 வயதான எந்தவொரு இந்திய குடிமகனும் சேர்ந்து பயன் பெறலாம்.

அதே நேரம் 55 வயதை எட்டிய எவரும் இத்திட்டத்தில் சேர முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் முதலீட்டாளருக்கு ரூ. 6 லட்சம் -ரூ. 24 லட்சம் வரை கிடைக்கும். LIC-ன் இந்த அன்மோல் ஜீவன் திட்டம் முதலீட்டாளருக்கு பேக்-அப் திட்டத்தை அளிக்கிறது. இதன் வாயிலாக முதலீட்டுக்கு சிறந்த உத்திரவாதம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பங்களிப்பவர்களுக்கு பிரிவு 80Cன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிரீமியம், மொத்த உத்தரவாதம் உள்ளிட்ட இரண்டுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

LIC -ன் அன்மோல் ஜீவன் திட்டம் கூடுதல் ரிவார்டு (அ) ரைடர் பலன்கள் எதுவுமின்றி இருக்கிறது. இத்திட்டத்தில் இறப்புக்கான நன்மை தவிர்த்து வேறு எந்த விதமான நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது. அத்துடன் இந்த திட்டத்தில் 30 வயதுடைய ஒருவர் தொடர்ந்து ரூபாய்.5300-ஐ பங்களிக்க துவங்கினார் எனில், அவரது இறப்பின்போது குடும்பத்தினருக்கு மொத்தமாக ரூபாய்.20 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, என்ஆர்இஜிஏ அட்டை ஆகிய கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வாடகை ஒப்பந்தம், ரேஷன்கார்டு, மின் ரசீது, எரிவாயு பில், தண்ணீர் பயன்பாட்டு ரசீது, பிறப்பு சான்றிதழ், எஸ்எஸ்சி சான்றிதழ் ஆகியவற்றை முக்கிய ஆவணங்களாக வழங்க வேண்டும்.

Categories

Tech |