பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் காவி உடை சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் இன்று இந்த பாடலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம், இப்போது ஷாருக்கானின் உருவ பொம்மையை தான் எரித்துள்ளோம்,ஒருவேளை எனக்கு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் உயிரோடு எரித்து விடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரிய மகாராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.