தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு இன்று டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் இளவரசர் டோக்கனை பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பேருந்துகளில் பயணிக்கலாம்.
Categories
அரசு பேருந்துகளில் பயணிக்க…. மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் டோக்கன்…. தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!
