பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து காலை நேரத்தில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலைகள் தெளிவாக இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பிறகு பனிமூட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதும் காலை நேரத்தில் அடர் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவைகள் காலை 10 மணி அளவில் திறக்கப்படும். மேலும் இந்த உத்தரவானது டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.