நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது மக்களுடைய தேவையை கருத்தில் கொண்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
அதன்படி கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த திட்டத்தை அரசு மீண்டும் நீட்டிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் நிதி ஆயோக் அதிகாரிகள் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அண்ண யோஜனா திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியிள்ளதால் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு தாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.