Categories
மாநில செய்திகள்

இது குறித்து விவாதிக்கப்படும்…. அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மாதம் 4-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் 35 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்தும், துறை மாற்றப்பட்டுள்ள 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும்  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுவது, புதிய தொழில் திட்டங்களை தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |