Categories
சினிமா தமிழ் சினிமா

“பிச்சைங்காரங்கன்னு சொன்னீங்க”…. இப்ப எதுக்கு தமிழகத்துக்கு மருமகளா வாறீங்க…. நடிகை தன்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தன்யா தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில், மாரி பட இயக்குனர் பாலாஜி மோகனை ரகசியமாக தனியா திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், தமிழ் ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர். அதாவது நாங்கள் பிச்சை எடுக்கும் போது எதற்காக தமிழ்நாட்டுக்கு நீங்கள் மருமகளாக வந்துள்ளீர்கள் என்று தன்யாவை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு காரணம் கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தன்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை மோசமாக விமர்சித்தார். இது இரு மாநிலங்களுக்கும் இடையில் மிகப்பெரிய டென்ஷனை ஏற்படுத்தியது.

அவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்ததாவது, டியர் சென்னை நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கும் போது நாங்கள் தண்ணீர் கொடுத்தோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கும் போது நாங்கள் மின்சாரமும் கொடுக்கிறோம். நீங்கள் எங்களுடைய அழகிய நகரத்திற்கு வந்து கொச்சைப்படுத்தி விட்டீர்கள். அதை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். தற்போது நீங்கள் பிளே ஆப் செல்வது எங்களிடம் இருக்கிறது. நாங்களும் விட்டு விடுகிறோம். நீங்கள் பிச்சை எடுப்பதும் நாங்கள் கொடுப்பதும் உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு சிஎஸ்கே அணியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தன்யா இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இப்படி தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தன்யா தற்போது தமிழ்நாட்டுக்கு மருமகளாக எதற்கு வந்தார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, பாலாஜி மோகனிடம் உங்களுக்கு வேறு பொண்ணே கிடைக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் தன்யா மற்றும் பாலாஜி மோகன் திருமணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

Categories

Tech |