2022-ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி 1-ஆம் தேதி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையங்களை முதலமைச்சர் துவங்கி வைத்தார்.
8-ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
12-ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இந்து மல்கோத்ரா குழுவை நியமித்தது.
பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட 216 அடி உயர சமத்துவத்துக்கான ராமானுஜரின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
மார்ச் 10-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி உத்திரபிரதேசம், உத்தர கண்டம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியது.
14-ஆம் தேதி பஞ்சாபில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
15 -ஆம் தேதி இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது சமய கடமை அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
16-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில ஒருங்கிணைப்பாளர் பகவன் மான் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
21-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் ந. பிரேம்சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சர் ஆக பதவியேற்றார்.
23-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
25 -ஆம் தேதி யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்றார்.
28-ஆம் தேதி பிரமோத் சாவந்த் கோவா மாநில முதலமைச்சராக இரண்டாம் முறை பதவியேற்றார்.
ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய தரைப்படையின் தலைமை தளபதியாக பதவியேற்றார்.
மே 9-ஆம் தேதி ச. மாரீஸ்வரன் மற்றும் சே.கார்த்திக் ஆகியோர் இந்திய தேசிய பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
15- ஆம் தேதி மாணிக் காசா திரிபுராவின் புதிய முதலமைச்சராகவும் பதவியேற்றார். அதேபோல் தாய்லாந்தில் நடைபெற்ற பூப்பந்தாட்ட தாமஸ் கோப்பையை இந்திய அணி வென்றது.
18-ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
ஜூன் 24-ஆம் தேதி எழுத்தாளர் மாலனுக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கருக்கான சாத்திய அகாதவி விருது அறிவிக்கப்பட்டது.
30-ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் சிவ சேனாவின் ஏக்நாத் சிண்டோவும், துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பாட்னா வீசும் பதவியேற்றனர்.
ஜூலை 17-ஆம் தேதி இந்தியாவில் 200 கோடிக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
25 -ஆம் தேதி திரௌபதி முர்மு 15- வது இந்திய குடியரசு தலைவராக பதவியேற்றார்.
28-ஆம் தேதி சென்னையில் 44-வது சதுரங்க ஒலிம்பிக் போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி 14-வது இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜெகன் தீப் தன்கர் வெற்றி பெற்றார்.
11-ஆம் தேதி இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்றார்.
27-ஆம் தேதி உதய் உமேஷ் லலித், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
செப்டம்பர் 28-ஆம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பு என இந்திய அரசு அறிவித்ததுடன், இது செயல்படுவதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
30-ஆம் தேதி அணில் சவுகான் இந்திய ராணுவத்தின் தலைமை படைத்தலைவராக பதவியேற்றார்.
அக்டோபர் 26-ஆம் தேதி மல்லி கார்ச்சுன் கர்கெ இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவியேற்றார்.
30-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் பாயும் மஞ்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலம் இடிந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
நவம்பர் 9-ஆம் தேதி நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரகுட் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
16-ஆம் தேதி ஒரு மாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வுகள் வாரணாசிகள் துவங்கியது.
டிசம்பர் 8-ஆம் தேதி குறசாத்து சட்டமன்றத் தேர்தல், 2022 மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தலின் முடிவுகள் வெளியானது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.