உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அவ்வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆதரவற்ற குழந்தைகளை நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் வண்ண விளக்குகளை மிளிர செய்து கிறிஸ்துபஸ் தாத்தாவோடு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மழலைகள் நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ்ஸை கோலாகலமாக கொண்டாடினர். வேளாங்கண்ணியில் உள்ள கிளின்டன் பார்க் நட்சத்திர விடுதியில் ஆதரவற்ற குழந்தைகளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி மகிழ்ந்துள்ளனர். அங்கு வந்த குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்து குதூகலத்தில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அதன் பிறகு கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகள் வழங்கிய நிலையில் அங்கிருந்து குழந்தைகள் பாடல்களை பாடியும் நடனமாடியும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.