கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அழகு படுத்த சில வழிகள் உள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் தங்களது வீடுகளை பல வண்ண பொருட்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதைப்போல் இந்த ஆண்டு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தற்போது இருந்தே தங்களது வீடுகளை அழகுப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உங்கள் வீட்டை மேலும் அழகுபடுத்த சில வழிகள் இருக்கிறது.
அதாவது நீங்கள் கடைகளில் கிடைக்கும் வண்ண வண்ண சாட்டின் ரிப்பன்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் அலங்கார பந்துகளையும், மணிக்களையும் இணைத்து உங்கள் வீட்டின் ஜன்னலில் தொங்கவிடுங்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதை போல் கிறிஸ்துமஸ் மரம் வைப்பதற்கு வீட்டில் இடம் இல்லை என்றால் ஒரு மேசை மீதே அழகான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க முடியும். அதாவது கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளை கண்ணாடி குடுவையில் போட்டு உங்கள் வீட்டில் ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம்.
இதனால் கிறிஸ்துமஸ் மரம் வைக்க இடத்தை தனியாக தேட வேண்டியதில்லை. மேலும் கொஞ்சம் பெரிய குடுவையில் கிளைகளை அதிகமாக வைத்தால் அதிலேயே அலங்கார பந்துக்கள், பணி மனிதன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம். இந்நிலையில் உங்கள் வீட்டில் உள்ள டைனிங் டேபிளை அலங்கரிக்க வேண்டும் என்றால், அதில் டம்ளர்களில் சிறிய கோல்டன் அலங்கார மணிகள், பந்துக்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றை போட்டு வைக்கலாம். இது மிகவும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். இதனையடுத்து உங்கள் வீட்டின் வாசலில் இரண்டு சாதாரண பூத்தொட்டிகளில் அலங்கார பந்துகளை வைத்து செடி போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். இந்த இரண்டு தொட்டிகளையும் கதவுக்கு வெளியே வைத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பதற்கு ஏற்றார் போல் இருக்கும்.