மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கி.பி 10ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார், ஒரு முறை ஜெபக் கூடத்துக்கு சென்று திரும்பிய போது பழங்குடி மக்கள் சிலர் ஓக் மரத்தை வழிபடுவதை கண்டார். இயேசுவை வணங்காமல் ஓக் மரத்தை வழிபடுவதை பார்த்து கோபமடைந்த போனிபோஸ் ஆத்திரத்தில் அதை பிடுங்கி எறிந்தார். அவ்வாறு பிடுங்கி எறியப்பட்ட மரம் சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் வளர ஆரம்பித்து விட்டது.
இதனை பார்த்ததும் இறைமகன் இயேசுவின் அற்புதசெயலாக கருதி அனைவரும் அதை கிறிஸ்துமஸ் மரம் என்று எண்ணி வழிபடத் துவங்கினார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே அன்று முதல் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மரம்,குடில் போடக்கூடிய வழக்கமானது தொடங்கியது. இது வெறும் வழக்கம் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்குக் கிறிஸ்து எப்படி பிறந்தார் என காண்பிக்கவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பிறக்க இருக்கும் பாலன் இயேசு நமது வீட்டிலும் பிறக்கவேண்டும் என்ற எதிர்நோக்குடனும் தான் அனைவரது வீட்டிலும் குடில் வைக்கப்படுகிறது.