வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரிகளை உடனடியாக கடையின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் இதுவரை செலுத்தவில்லை.
இதனால் இன்று திருவல்லிக்கேணி, ஜி.பி. சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள 125 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடையின் உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.