Categories
மாநில செய்திகள்

வீடு கட்டி கொடுப்பாங்க?…. தல அஜித் பெயரில் மோசடி…. பணத்தை இழந்து தவிக்கும் ரசிகர்…. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் வசித்து வருபவர்கள் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினர். இதில் ஐயப்பன் அஜித் ரசிகர் என கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு திருநெல்வேலி தாளையத்து பகுதியை சேர்ந்த சிவா என்பவர், எனக்கு அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் நெருக்கமானவர் எனக்கூறி ஐயப்பனை நம்ப வைத்துள்ளார். அத்துடன் நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும் சிவா, “வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப் பதிவுக்கான தொகை 1 லட்சம் செலுத்த வேண்டும். அதன்பின் வீடு கட்டுவதற்குரிய தொகை 15 லட்சமும், பத்திரப் பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும்” என ஐயப்பனிடம் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பணத்தை பெற நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என போலியாக ஒருவரை தயார் செய்து ஐயப்பனிடம் பேச வைத்துள்ளார்.

இதையடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர் சிவாவிடம் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த தம்பதியினர், சிவாவிடம் கேட்டதற்கு இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐயப்பன் மனைவி ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். இவ்வாறு நடிகர் அஜித்தின் ரசிகர் இடமே அவரது ரசிகர் மன்றம் பெயரில் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |