காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன்.
நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் நான் அறிவேன். இதற்கிடையில் பலர் முன்னாள் உளவுத் துறை அதிகாரிகளாக இருப்பதால், அனைத்து திணிக்கப்பட்ட IB அறிக்கைகளும் எனக்கு தெரியும். அனைத்துக்கும் மேலாக கடவுளும் தர்மமும் என் பக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியும் எனவும் காயத்ரி பதிவிட்டுள்ளார்.