Categories
உலக செய்திகள்

கூகுளில் ஏற்பட்ட டிராபிக்…. அப்படி எதை தான் தேடினார்கள்?…. சுந்தர் பிச்சை வியப்பு….!!!!!

கூகுளில் டிராபிக் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கர்த்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மட்டும் அர்ஜென்டினா  அணிகள் மோதியது. இந்நிலையில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல்  அடிக்க கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பின்னர் இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில்  சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டிக் கிக்  முறையில் வெற்றியாளரை  தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெனால்டிக்  ஷீட் அவுட்டில், அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் கோப்பையை தட்டி சென்றது.

இந்நிலையில் அர்ஜென்டினா அணியின்  வெற்றியை அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட 25 ஆண்டு கால வரலாற்றில் எந்த நாளும் இல்லாத பயனர்களின் டிராபிக் நேற்று முன்தினம்  இருந்ததாகவும், அதில் அனைவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பற்றி தான் தேடியுள்ளனர் எனவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |