இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையானது புத்தகயா செல்லும் யாத்திரீகர்களுக்கும் வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற ஜனவர் மாத மத்தியில் இருந்து இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையான கப்பல் சேவை தொடங்கப்படும் என கூறியுள்ளார்.
Categories
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை… எப்போது தெரியுமா…? இலங்கை மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!!!
