சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி:சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களை அமைத்திட அதிக ஆர்வம் காட்ட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.