Categories
மாநில செய்திகள்

அடடே!… செம சூப்பர்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….‌ வெளியான அசத்தல் தகவல்…!?!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசாக கரும்பு, வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

இதனால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்படும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே மளிகை பொருட்கள் மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ரொக்க பணமானது நேரடியாகவோ அல்லது வங்கி கணக்கிலோ செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |