தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள அயலான் திரைப்படத்தின் சூட்டிங் பல காரணங்களால் 2 வருடங்களாக தள்ளிப்போனது. இந்த படம் ஏலியன்ஸ், பிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக இருக்கும் என்று பட குழு ஏற்கனவே அறிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அயலான் திரைப்படத்தல் அவதார் 2 திரைப்படத்தில் பணிபுரிந்த சில தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.