Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம்…. ஆசிரியர்களுக்கு இந்த 3 நாட்கள் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர்  மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில்  மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம்  குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3-ஆம்  வகுப்பு வரை  கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான பயிற்சி அடுத்த மாதம் 2-ஆம்  தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி பார்வையிட்டு அதனை திறம்பட  நடத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து வசதி, பயணப்படி போன்றவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியரும், பயிற்சி நிறுவனம் முதல்வர்களும் வழங்க வேண்டும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |