தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு பொருள்களும் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ரேஷன் அரிசி கடத்தல் தற்போது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசி குறித்து தொடர்ந்து புகார் வரும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் நன்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.