போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி விலக தீர்மானித்து கடிதம் அளித்ததாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, உடல்நல பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் என் பணியை சரியாக செய்ய முடியவில்லை எனில் என் கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று, “பணி துறத்தல்” கடிதத்தை அப்போது வாடிகன் வெளியுறவு செயலாளராக இருந்த டார்சிசியோ பெர்டோனிடம் கொடுத்து வைத்து விட்டேன். அவர் தற்போது பதவி விலகி விட்டதால் அந்த கடிதம் தற்போது செயலாளராக இருக்கும் பியட்ரோ பரோலினிடம் இருக்கும் என கூறியுள்ளார்.