Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 30 வருஷம்…. அண்ணி, அண்ணின்னு சொல்லி…. C.M குடும்பத்தில் ஒருவரான வேல்முருகன்… !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அணைக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பக்கத்தில் கவர்னர், முதலமைச்சர், டிஜிபி, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடுத்த சீட்டு எனக்கு தான். நானு, ஜிகே மணி, செல்வ பெருந்தகை, ஜவாஹிருல்லா பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்தோம். உதயநிதி ஒவ்வொரு டேபிலா  வந்து பார்த்துட்டு போகும் நாங்க ஜாலியா ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தோம். அது எடுத்து வெட்டி, ஒட்டி போட்டு இருக்காங்க.

நான் சால்வை கொடுத்தது வேற இடம். அது வெட்டி ஒட்டி போட்டதை  அவங்க எல்லாம் கும்பலா இருக்கிற இடத்துல கொடுக்குற மாதிரி காட்டுறீங்க. அதனால அது ஒன்னும் தவறே இல்லையே. ஒரு தமிழர் கிட்டத்தட்ட என் வயசுக்கு நிகரானவர் அவர். என்னுடைய இரண்டு வயது இளையவர். சபாநாயகர், முதலமைச்சர்,  கவர்னர் இருக்கிற போது  அண்ணன் என சொல்வது என்ன ? தப்பான வார்த்தை. இது என்ன தப்பான வார்த்தையா ? இதில் என்ன விமர்சனம் வேண்டியிருக்கிறது.

அருமை நண்பர் சீமான் அவர்கள் என்னை ரத்தம் என்று தான் கூப்பிடுகிறார்.  நானும் ரத்தம் என்று தான் கூப்பிடுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பல தலைவர்களை அவர் அப்பா என்று தான் கூறுகின்றார். அதனால் எல்லாரும் அவருக்கு அப்பாவா ? உதயநிதியை அண்ணன் என கூப்பிட்டது, அவரை மேன்மைபடுத்துவதற்கு, மாண்புமிகு அமைச்சரான பிறகு சபை நாகரிகம் கருதி அப்படி அழைக்கப்பட்டது. இதில் என்ன சர்ச்சை இருக்கு ? இதுல யாருக்கு என்ன வருத்தம் இருக்கு. துர்க்கா ஸ்டாலின் அவர்களை 30 வருஷமாக நான் அண்ணி என்று தான் சொல்லிக்கிட்டு வருகின்றேன்.

Categories

Tech |