குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 1000 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உறுதியான தகவல் வெளிவரவில்லை.