Categories
மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: 10 வருஷத்தில் எவ்வளவு வரவு செலவு?…. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு….!!!!

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கொண்டாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது “பா.ஜ.க குறித்து கூறப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் எடுத்து வருகிறோம். 2024ல் மிகப் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க ஏற்படுத்தும். அரசு பணத்திலிருந்து 1 ரூபாய் கூட இப்போது வருமானம் பெறவில்லை. எனினும் என்னிடம் தி.மு.க ஒரு கேள்வி கேட்டுள்ளது.

தி.மு.க-வினர் என் உடைகள், கடிகாரம், கார் பற்றி கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காக தான் ஒன்றரை வருடங்களாக காத்திருக்கிறேன். இதற்கிடையில் இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்யவுள்ளேன். தமிழகம் முழுவதும் விரைவில் பா.ஜ.க சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோவில்களுக்கும் செல்ல இருக்கிறேன்.

என் நடைப்பயணத்தை தொடங்கும் போது நான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான 2010-11ம் ஆண்டு முதல் என் வங்கிக்கணக்கு நிதி விவரங்களை மக்களுக்கு சமர்ப்பிக்க இருக்கிறேன். கடந்த 13 வருடத்தில் நான் செய்த அனைத்து செலவுகள், என் வருமானம் பற்றி சமூகவலைதளத்தில் நடைபயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்யவுள்ளேன். அதாவது, 5  ரூபாய் கொடுத்து நான் படத்திற்கு சென்றிருந்தாலும் அது பதிவாகி இருக்கும்” என்று பேசினார்.

Categories

Tech |