Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று…. மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாளில் இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ராமேஸ்வரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக சூறைக்காற்று வீசலாம் எனவும் இதனால் கடலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |