தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று அவர் மீதான வழக்கை மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Categories
உப்பெனா விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்..!!
