பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது.
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்துவதால் அமைச்சர்கள் நாளை கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று ஏற்கனவே அதிகாரிகள் கூறியிருந்தனர். இதன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, வேலு, அன்பரசன் ஆகியோர் இடம் பெறுவர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 13 கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு ,நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் நாளை அமைச்சர்கள் அடங்கிய குழு ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.