உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் முஸ்கானிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது முஸ்கானுக்கு அயன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும்தான் இருக்கிறார். இவர் காசிப் என்பவருடன் தகாத உறவில் இருந்ததன் காரணமாக வெளியுலகத்திற்கு காசிப்பை தன்னுடைய மூத்த மகன் என்று முஸ்கான் அடையாளம் காட்டியுள்ளார். இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென காசிப் மற்றும் முஸ்கானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காசிப் அயனை கொலை செய்து சூட்கேசில் வைத்து கங்கை நதியில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.