தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட இருக்கிறது. அந்த பணத்தை ரொக்கமாக வழங்கலாமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து இன்று அறிவிப்பும் வெளியாக உள்ளது.