தங்கலான் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் தங்கவயல் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பில் சில வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட படபிடிப்பானது சென்னையில் நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.