தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 54-வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
அதோடு கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இருந்தும் தான் விலகுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் காரணமாக நடிகர் கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக தன்னுடைய தயாரிப்பில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.