ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப் பிரதேச எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனையை பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம் சாடியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாங்கள் சீனா போருக்கு தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்து இருந்தார். அவர்கள் கூறுவதை போல மத்திய அரசும் சீனாவிற்கு பதிலடி கொடுக்காமல் அவர்களிடமிருந்து அதிக அளவில் பொருட்களை தொடர்ந்து இறக்குமதி செய்கின்றனர். மேலும் அவர்கள் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. இந்நிலையில் சீனா என்ன செய்தாலும் அவர்களிடம் இறக்குமதி செய்வதை மத்திய அரசு குறைப்பதாக இல்லை என அவர் கூறியுள்ளார்.